Wednesday, October 27, 2021

மாக்ஸ் முல்லர்

நூறாண்டுத் தவம் கிடந்து 
முத்தி நோற்ற முதிர்சுவையில் 
எதிர்க்கரையில் பழுத்து 
இக்கரைக்கு ஏங்கிய 
அக்கறையே ஊட்டமாய்த் திரண்ட 
ஞானக்கனி 
ஓடு விதை உள்பருப்பு 
கோதனைத்தும் தீஞ்சுவையாய்த் 
திரள்பயனாய் 
உருண்ட கனியில் 
ஏதோ ஒரு பகுதியில் 
ஊசிமுனைக் குத்திடத்தின் 
ஒரு நாலு பங்கில் ஒரு பங்களவு 
சிறிய புள்ளி சரியில்லை என்றாய் 
சரிதான். உன்னைக் கனியுண்பவன் 
என்று தவறாக நினைத்துவிட்டேன் 
மற்ற பகுதியெல்லாம் 
மாமருந்து என்று கூறி 
நண்பனிடம் கொடுத்த கனி 
அவன் கை கனக்கத் 
திருப்பித் தந்ததை 
இங்கேதான் எங்கோ வைத்தேன் 
எங்கே என்றறிந்தால் சொல்லும்

***

No comments:

Post a Comment