Thursday, October 28, 2021

தரிசனம்

வரிசையில் நின்று 
தரிசனம் ஆன 
மண்டபத்தில் 
கடவுள் அர்ச்சகர் 
பெண்கள் என்ற 
முக்கோணத்தில் சுழலும் தரிசனம் 
ஆன்மிகம் லௌகிகம் 
ஒன்றின் வால் ஒன்றின் வாயில் 
தட்டில் போட்ட பணத்தின் சத்தம் 
தட்டியைத் தாண்டியதும் 
கேள்வியாய் எழுந்து 
இறைவனைக் கேட்டது 
எது நீர்? 
காய்ந்த வயிறா ஐம்பொன் சிலையா 

***

No comments:

Post a Comment