நேரெதிர்ந்ததனைத்தும் எரித்தூடு
உள்ளுருவிப் புகும் திசையில்
உறுதடத்து உசாவியெழும்
அலைச்செதில்கள் மட்டித்துக்
கருவான் நிறங்கலந்து
கண்ணொளி தளிர்புனைந்து
வெருவுதரு எரிதழலின்
விம்ப உரு எதிரொளிர்த்துப்
பெயர்தருமோர் புனலருவி
பிறங்குகள் இடைதழுவிப்
பெட்புறக் கடந்ததுவால்
பிஞ்ஞகனார்க் குறுநகையாய்
***
No comments:
Post a Comment