Wednesday, October 27, 2021

ஏனிந்த மாற்றம்?

ஏனிந்த மாற்றம் 
எவர் வருகின்றார் 
இடியின் கட்டியத்தில் 
காற்று ஓரம் ஒதுக்கிவிட 
ஒரு பளிச்சுக் கற்றைதனை 
மின்னல் சுழற்றிவர 
நாய்கள் நடுங்கி 
நடுவானைத் தாம் குலைக்க 
மண்ணின் மலர்முகத்தின் 
மகரந்த வாசனையில் 
நடைபயின்று வருவோர் யார்? 

***

No comments:

Post a Comment