Sunday, October 31, 2021

ஆடுங் கூத்து

மூலைத் தெருவில் 
மாலை மயக்கில் முடுகும் சந்தில் 
பொட்டு கட்டியது பரமனுக்கு. 
பொங்கும் பரிவு மனிதனுக்கு 
பொருளில் அக்கறை வயிற்றிற்கு 
கருவின் கனவுகள் சொர்க்கத்திற்கு 
நட்டுவாங்கம் நடைமுறை வாழ்க்கை 
தாளகதியும் சொற்கட்டும் 
பதவிந்நியாசமும் அபிநயமும் 
பாவச் சொடுக்காய் அடவுகளும் 
பாவை பயிர்ப்பில் படிந்துவர 
பங்கஜதள நேத்ரம் 
ஸரோஜ ஹஸ்தம் 
கமலச் செங்கனிவாய் 
அன்றலர்ந்த பதுமத் திருமுகம் 
மொட்டவிழா முளரி மிடைத்தன்ன மென்முலை 
தண்டாமரை தடமொத்தும் செவ்வடி 
புற்றரவல்குல் 
புனைமயில் 
கற்றுக்கறவை படுகாடு கிடந்தன்ன 
கலைவிரி மேகலை 
அலைபயில் ஜதிகள் 
கண்டார்மனம் செண்டெனக் 
கைக்கொண்டவை விண்டவை 
தண்டைப்பதமென 
அண்டபகிரண்ட நாயகன் அடியாள் 
ஆடுங்கூத்தில் 
குழந்தையின் அழுகையும் 
தாயின் ஏக்கமும் 
அழுந்திக் கிடந்ததை 
அறியும் பரம்பொருள் 

***

No comments:

Post a Comment