Tuesday, October 26, 2021

பிரம்ம பிரயத்தனம்

கடலை
ஆடாது அசங்காது
ஒரு கணமேனும் நிறுத்தி வைக்க
ஒரு குருவி
அங்குமிங்கும் ஆடிப்பறந்து
புன்சிறகு குவித்து விரித்துப்
பிரம்ம பிரயத்தனம் செய்வதற்குப்
பகலில் வெயிலாய்
இரவில் நிலவாய்ப்
பந்தம் பிடிக்கும் ஒன்றைப்
புறக்கண் காணும் அன்றே
சாகசப் புள்ளிற்கு ஓய்வு 

***

No comments:

Post a Comment