கொட்டிய ரசக் காட்சி
எண்ணத்தின் அமுதப் புனலை
எங்கும் பரப்பி வைத்த பசும்பேழை
பண்ணில் பயிர் செய்து
பரவசமணி அறிந்து வைத்த
பொற்குடங்கள்
விண்ணை நெசவாக்கி
வியனாடை ஓரத்தில்
குங்குமம் தொட்டு வைத்த
கோலப் பகல்
காட்சியின் சொல் விடியக்
கதிரெழுந்த கவிதை
***
No comments:
Post a Comment