Wednesday, October 27, 2021

காளான் சித்திரம்

என்ன இது! இந்த உலகம் 
காரைச்சுவரில் பூத்த 
காளான் சித்திரம் போலப் 
பார்க்கும் விதத்தில் எல்லாம் 
படம் மாறி மாறிக் 
காட்சி தருகிறது 
மழையிலும் வெயிலிலும் 
காய்ந்து நனைந்ததாலா 
மனக்காளான் பூத்ததாலா 
எனக்கென்ற ஓரத்தில் 
நான் நின்று பார்ப்பதாலா? 

***

No comments:

Post a Comment