பல உலகங்களைக் காட்ட முடியும்
பல பிறவிகளைத் தந்து
பல கடல்களில் ஆழ்த்திப்
பல வானங்களை விரித்துப்
பல உடல்களில் வாசத்தைத் தரமுடியும்
உங்களைச் சுமந்து அன்று
இழுத்துத் திரிந்து அன்று
உட்கார வைத்து ஓட்டிச் சென்றன்று
ஒன்றுமே செயல் இல்லாது
உருப்படிக் கணக்காய்
இருந்தால் உங்களை என்னால்
ஒன்றும் நிகழச் செய்ய ஒண்ணாது
என் சிறகசைவின் சமிக்ஞைகள்
புலனாகும் உணர்வுப்பொறுப்பு
உங்களுடையது.
***
No comments:
Post a Comment