Wednesday, October 27, 2021

உணர்வின் ஒளிமுகை

கால அலைமுகட்டில் 
கருக்கொள் பொருள் மீது 
கணமோ கல்பமோ கட்டுமரமேறி 
விலக நிற்கும் நிற்க வரும் 
வேகத் தரங்கங்களூடு 
அலகேந்தும் அற்புதத்து மர்மம் அறிவிக்கச் 
சிந்தா சித்தத்துச் சீர்முனையில் 
அந்தத்தின் பின்னும் 
அலையாத நுணுக்கத்தின் 
உணர்வின் ஒளிமுகைக் 
குவிநுனி கடந்திலகு  
திறனூற்றத் தோற்றா உருவாம் உயிர்ச்சுடர் 

***

No comments:

Post a Comment