Thursday, October 28, 2021

உயிர் விஸ்தாரத்தின் உணர்வு

எங்கோ எவரோ எப்பொழுதோ 
ஏன் என்ற கேள்விக்கு 
விடைதர வேண்டி 
எவ்வாறோ எக்கருத்தோ எம்மொழியோ 
எவர்க்கோ உரைக்க 
அவையெல்லாம் 
அன்றிலிருந்து இன்றுவரை 
இனி என்றோ அன்றும் வரை 
நின்று நிலைத்திடினும்.. 
நீள் புவியும் நெடுங்காலத்து ஓர் கணமும் 
உள் நின்ற உயிர் விஸ்தாரம் 
உணர்கின்ற அர்த்தம் என்ன? 

***

No comments:

Post a Comment