சுருண்ட முடிக்கு நடுவே
தெரியும் இருள்
மனம் எங்கே என்று கேட்டது
கண்ணின் விழியில்
மின்னும் ஒளி
இருள் எங்கே என்று கேட்டது
காதின் முறத்துள்
குழிந்த வளைவு
பாதை எங்கே என்று கேட்டது
காலடியின்
உட்பாதச் சொப்பில் அடங்கிய
சிறுவெளி
விண்ணாய் விரிய வேர்த்தது
***
No comments:
Post a Comment