நெஞ்சங்களின் கனம் ஏற ஏறப்
பேருந்து ஊர்ந்து சென்றது
பாட்டியம்மையில் தொடங்கிய பயணம்
பிரளயத்திற்கு அச்சாரம் ஆகியது
காவிநீர்ப் பெருக்கின்
சூறைக் காற்றில்
உறவின் மரங்கள்
மனஸ்தாப விறகுகள் ஆயின
நம்பிக்கை விண்மீன்கள்
ரேஷன்கடை பல்புகள் ஆகி
யதார்த்தம் பேசின.
கரைகட்டாக் காவிரி
வீட்டுப் படிக்கட்டில்
அலைகட்டி நின்றது
முதுகில் சார்த்தி வைத்திருந்த
பாச மூங்கில்கள் உலர்ந்து பற்றிக் கொண்டன
கண்ணுக்குப் புலனாகாத
உறவின் மின்சார இணைப்புகள்
தம்முள் குறுக்கு வெட்டில்
பாய்ந்து வெடித்தன
குளிரில் நடுங்கியவனுக்குக்
கொல்புலித்தோல் போர்த்திவிட்டுப்
போன சிவன் எங்கே?
***
No comments:
Post a Comment