இருளின் ஈரக்கால்கள்
இடத்தின் மெய்யெங்கும் பற்றி
உணராத் தோலின் உள்வெளியெல்லாம் பரவக்
கண்ணற்ற காட்சியின் கருமை
தன்னைத் தானே காண்பொருட்டு நின்றது
எண்ணற்ற ஒளிச்சுரும்புகள் அணுச்சாரலாய்
மண்ணற்று விண்ணற்று கண்ணற்று
எண்ணுமற்ற இடகால
ஈருமிழைப் பந்தப் பின்னலூடு புக்கு
இடம் காலம் என்ற ஈருரு இறுத்துக்
கணத்தின் கண்விழி மையத்துள்
காணாக் கூரிருளில்
குவித்த உயிர்த்தொகையைக்
கூறாக்காக் காலத்தே
தன்னைத் தானறியத் தன்னில் வேறாய்த்
தன்னின் புறத்தொன்றின்றித் தானே தனதாய்த்
திதித்த ஒன்றில்
திரை தத்தித் திரிந்த வேகம்
கால முதுகோடேறி
இடத்தின் விலா பற்றிக்
கிளர்ந்தெழுந்த கோலம் இவ்வுலகம்.
***
No comments:
Post a Comment