மழை பிடிப்பதும் விடுவதும்
பிடித்து விடுவதுமாக
உறுமிச் செல்கிறது
தென்னங் கீற்றுகள்
நினைத்து நினைத்துச் சிரிக்கின்றன
புதிதாகக் கல்யாணமான பெண்
கதவைத் திறந்து திறந்து மூடுகிறாள்
காலக் கிழவிக்கு
விட்டு விட்டு இருமல்
வழக்கமாக ஊளையிடும் நாய்
இன்று எங்கோ காணவில்லை.
***
No comments:
Post a Comment