பக்கத்தில் எங்கும்
பலப்பல ஓசைகள்
பல்லி கொட்டும் ஒலி
பார்வைக்குத் தெரிகின்ற மரக்கிளையில்
புள்ளும் பிள்ளை அணிலும்
பெரிதாகக் குரல் கொடுத்து
ஒரு காகமும்
இவை அனைத்தையும் இல்லை செய்ய
ஒரு இருள் திரையை
நடுநடுவில்
பெய்து பெய்து விலக்கும் இமையும்
வடிகால்கள் போன்று
விழிமுன்னர் விரியும் புருவ மயிரும்
அதனூடு வகுபட்ட வெளி உலகும்
இமைக்குப் பின் இருள் விரிக்கும் கனவும்
திணிந்த ரயிலில் சாலையில்
பயணித்துத் தெருக்கடையில்
தருக்கம் முற்றக்
கல்லாவைத் தாண்டிச்
சங்கப் பலகை மிதித்தேறிச்
சுவரோரம் ரயில் சத்தம் கேட்க
ஏறி அமர்ந்த பின்னே
அசதியில் தூங்குங்கால்
கல்லாவில் தட்டும் சத்தம் கேட்டு
விழித்துப் பார்க்கக்
கொல்லையில் துவைக்கப்படும்
துணி என் சட்டை
***
No comments:
Post a Comment