யாரும் வந்து விடாதீர்கள்
நீரற்ற நிலத்திட்டில் மாடுகள் கூடிநிற்கும்
நாயொன்று நாகரிகமாக நகர்ந்து
நுழைந்து தயங்கிக் காத்து நின்று செல்கிறது
மனிதன் பார்த்துப் பார்த்துக்
கால் வைத்து நடக்கிறான்
கார் ஒன்று வருகிறது
மக்கள் தலைகளைச் சுமந்து
சேறு என்ன சகதியென்ன
சக்கரத்திற்கா தெரியும்?
தெறித்த சேற்றில்
பொறியெழும் மனிதரின் கோபம்
மாடு வாலைச் சுழட்டுகிறது
நாய் பதுங்கிக் கொள்கிறது
விரைந்த காரின் குசுவாய்க்
காதையறுக்கும் வல்லிசைக் கொட்டு
மூடிநகர்ந்த தெரு சேற்றால்
தன் மூக்கை மூடிக் கொள்கிறது.
***
No comments:
Post a Comment