Sunday, November 21, 2021

ஜீவ களை

எனக்கு எதிரில் தண்டவாளங்கள் 
பின்னாலும் தண்டவாளங்கள் 
எனக்குப் பக்கத்தில் தள்ளி 
அதற்கு அப்பாலும் தள்ளித் தள்ளி 
இரும்பிருக்கைகள் 
இருந்தவாறே நான் அவள் 
அதற்கப்பால் அவர் 
அதற்கும் அப்பால் அவர்கள் 
அப்பாலும் தாண்டி மற்றவர்கள் 
கண்ணுக்கெட்டிய தூரம்வரை ரயில்மயம் 
பெருமூச்சும் சிறுநீரும் 
வேர்வையும், கொட்டாவியும் 
கேட்கப் பார்க்கச் சூழலில் 
நன்றாய் இருக்கக் கொடுத்து வைத்த படைப்பு 
இப்பொழுதுதான் ஒரு ரயில் 
சட்டியைக் கழட்டிவிட்டுச் சொறிந்து கொள்கிறது 
அதன் மூலக்கனலில் அசிங்கம் இல்லை 
தண்டவாளம் ஓடுவன அவற்றுக்கான 
குளியல் அறையிலும் கழிப்பறையிலும் 
ஒரு வித நேர்த்தியில் தம்மைப் புதுப்பிக்கின்றன 
அவற்றில் ஜீவன் இல்லை 
ஆனால் களை இருக்கிறது. 

***

No comments:

Post a Comment