அறுபதுக்குப் பின்வரையில்
ஆதியோடந்தமாக
அந்தாதி தானுமாக
வேறுபட்ட வாழ்நிலைகள்
வாழ்வெல்லை நூற்றுக்குள்
அத்தனைக்கும் அடிக்கல்
ஆறுக்கு முன்னேயே
அமைக்குமுயிர் ஆரத்தின்
ஆர்வலித்த உணர்ச்சிகளில்
இத்தனையும் சொல்கின்றார்
உள் இயல் ஆய்வாளர்
ஆதலினால் ஆறுக்கு
முன்பிருந்த நிலை சொன்னால்
ஒரு நூறும் சொல்லியதாய்
ஆகாதோ
உருவான விதியின் விக்ரகமாய்
வடிவான மனித உயிர்க்கதியும்
கடைக்காலில் கற்பித்த இரகசியத்தைப்
பதியும் இளமனத்தில்
பதிவிருந்த சூட்சுமத்தைத்
துதிகொள் குழந்தைமையில்
தோய்ந்திருக்கக் காணீரோ!
***
No comments:
Post a Comment