கழுத்தை ஒடித்துக் குனிந்து
கண்ணிமைக்குப் பின்பக்கத்து இருளில்
நெருப்புக் கோழி போல் தேடுகிறாய்!
உள்ளே என்பது அங்கு இல்லை
கண் இருக்கட்டும்
காண்பதை விடு
காது இருக்கட்டும்
கருத்தைக் கேள்
கருத்து இருக்கட்டும்
உருவத்தை உணர்
உருவத்தை விட்டு
உணர்வில் நில்
நிற்க முயலாதே இரு
உணர்பவனில் நின்று
உணர்வின் வழிச் சென்று
உணரப்படுவதை விட்டு
உணரும் ஒன்றாய் இருந்தால்
அதுவே
உள்ளாய் நின்ற ஒன்று.
***
No comments:
Post a Comment