மனக்குதிரை சிறகு முளைத்துத்
தினத்தீவுகள் தாண்டி
உருளும் திங்கள் திருச்சுற்றில்
துணைதேடிக் கூரை ஊதும் கருவண்டு
வீசும் சிறகில்
விரைவுப் பளிங்காய்
வெயில் வானம்
வினை ஓய்ந்து
மையிருள் கூட்டில் மடங்கி
மாகடல் எழும் வையம் நிரந்து
வினை ஊதும் பொன் வண்டின்
பக்கம் உரசிப் பறந்தது
பங்குனித் திங்கள் சேர்த்தியில்
***
No comments:
Post a Comment