தாவரமாய் இருக்கச் சலித்து விட்டதா
தன் கீற்றுக்களைச் சிறகாய் ஆக்கிக்கொண்டு
பறந்துவிடப் பேயாய் ஆடுவதேன்?
தானீன்ற காயை விடத்
தகதகத்துத் திகழ் ஒளியில்
திவத்தின் தென்னை ஈன்ற
தேங்காயில் திகைப்புண்டு
தொடர்ந்து தொடுவானில்
தொலையாமுன் மர்மத்தை
வாங்கிவரத் தலைதுலுக்கித்
தவிக்கும் தாவரமாய்த் தென்னை.
***
No comments:
Post a Comment