நினைவுகள் நனையவில்லை
தலையைத் துவட்டும் என் முன்னால்
தேநீர் ஆவி பரக்க.
எங்கோ தொலைபேசி மணியடிக்கிறது
யாரோ எடுக்கிறார்கள்
நின்றுவிட்டது
தொலைபேசி மணி எங்கோ
வெகுநேரம் அடித்தவாறு
இருக்கிறது ... யாரும் எடுக்கவில்லை
நின்றுவிட்டு மீண்டும் அடிக்கத் தொடங்குமோ?
***
No comments:
Post a Comment