Thursday, November 4, 2021

நான் மீது நான்

அந்திப் பொழுது வெருண்டு 
கட்டுத்தறியில் குதித்த 
சந்தடி தலையில் அதிரச் 
சரிந்தது மாலை மயக்கு 
அந்தர வயலில் கற்பனைக் கதிர் முற்றி 
அறுவடையான மூச்சின் மேட்டில் 
ஒவ்வொரு தலையையும் 
நினைவால் துடைத்து மாட்டும் வரையில் 
முண்டக் கழுத்தில் 
பரிதி படுத்து அயர்ந்து 
விட்ட கொட்டாவியில் 
முக்காலமும் தூக்கிவாரிப் போட்டு 
எழுந்து கொண்டது. 
நான் மீது ஏறி நின்று 
நான் எட்டிப் பார்க்கத் 
தாங்காத நான் ஒடியத் தூக்கிப் போட்டு 
வேறு நான் எடுத்துத் 
துடைத்து வைத்த நேரத்திற்குள் 
உறுமிக் கொண்டிருந்த உலகம் 
குதிபோட்டு உறங்கிக் கொண்டிருக்கும் 
அசதியில் எழுப்ப வேண்டாம் 
பிறகு பார்ப்போம். 

***

No comments:

Post a Comment