தன்னில் அறிவு நெறிந்தோடும் கணத்தில்
தரை வீழ்ந்த தொடர்பில் தொங்கினேன்
துண்டாடித் தனியாகித் தவித்த குரல்
தெம்பூட்டத் தாள் பிரித்துத் தடக்கை நீட்டி
என் குரலின் உருவத்தை
எடுத்து வனைந்தேன்
அக்கணத்தில் விதி புகுந்து
வினையொப்பந்தம் போட்டது.
சந்தர்ப்பச் சொகுசாய்ச்
சங்கல்பமாகச் சமயங்கள் வாய்த்தன.
சூழுலகும் சுக உணர்வும்
என்னுள் ஒரு கதை எழுதத் தொடங்கி
நான் எழுந்ததும் என் கையில் ஒப்படைத்துத்
தொடரவும் முடிக்கவும் விட்டுவிட
எழுதாமல் நான்
ஆதியிலிருந்து
புரட்டிப் பார்த்து ரசித்துச் சிந்திக்க
ஏன் இந்த அண்டத்திலும் அதை
உள்வாங்கிச் சுற்றும் பிண்டத்திலும்
பூகம்பம் வெடிக்கிறது?
அறிபவனை அறியாதோ அனைத்தும்!
***
No comments:
Post a Comment