Wednesday, November 24, 2021

புத்தகம்

புத்தகம். 
அறிவின் திகழ்வோரால் 
எழுதப்பட வேண்டியதாக 
எதிர்பார்க்க வேண்டியதாய் 
நினைக்கப்பட வேண்டிய ஒன்று 
புத்தகம் என்பது படிக்க ரசிக்கப் 
பயன்பெறப் படைப்பின் ரகசியத்தைத் 
தடம் ஒத்தி முகர்ந்து செலும் 
சாத்தியங்களின் சமன்பாட்டுச் 
சுடர்ப்பொலிவைச் சூர்ணிக்க 
நண்பரிடம் தந்து நயம் காண; 
புத்தகம் என்பது பவர் கேம் அன்று 
பொய் பொய் பொய்யை மறைக்கப் 
பொய்யில் அப்பிய பொய்யாய்ப் 
பொதியாகித் தன்னில் 
பாரம் தாங்காது அற்றுவிழச் 
சேர்த்துத் தைக்கும் 
உண்மையின் நூலிழைத்துக் கோத்து 
உயிரின் பதைப்பில் 
உள்ளிதயத்தின் ஊடாகக் 
குத்திப் போய் நிற்கும் 
உணர்வூசியை நக்கிப் 
புக எளிதாய் நாபுரட்டும் 
மனத்தைப் பொத்தப் 
பயனின்றிச் சுருண்ட 
வார்(ல்)த்தையின் நுனியில் 
சிறகமரும் நிதர்சனம் 

***

No comments:

Post a Comment