Thursday, November 11, 2021

மால் கொண்ட மனம்

மனத்திலே ஈடுபட்டு 
முனைந்து நான் செய்யும் செயலில் 
நேர்த்தியாய் இயற்றும் போதும் 
அனைத்தையும் மீறி 
எதிர்பாராத விதமாய்த் தவறும் 
ஏற்படும் இயற்கைக்கே 
ஆனவரை இடங்கொடாமல் 
ஆற்றிடும் சாகசத்தில் 
ஓரிரு சமயம், உற்றிடில் 
எதிர்பாராவிதமென்ற நாய் 
இழுத்துச் சென்றோடும் நிகழ்வைக் 
கண்டும் காணாததுபோல் 
குறுநகை புரிந்திருந்தால் 
காணப் பொறுக்காத காலம் புகுந்து 
கொணரும் அனைத்துக்கும் 
நினைக்காததும் கேட்காததும் 
கொட்டிப் பரப்பிடும் குறளிபோல் 
விதியும் வாய்ப்பாகி வந்து நிற்ப 
மால் கொண்ட மனத்தில் 
மனிதன் நான் கேட்பது 
மனத்தின் சுழல் நிற்பதற்கே. 

***

No comments:

Post a Comment