சில அப்படியே சில இன்னும் மெருகுடன்
சூட்சுமமாய்ச் சுதந்திரம் போல்
சுயத்தின் சாயப்பழுப்பின்னும் கரையாமல்
கல் மண் காற்று தீ உடம்பு வெளி
உள்ளம் மனம் எண்ணம் புத்தி
எல்லாம் சடமான சுயத்தைச்
சைதன்ய வேஷத்தில் சங்கமமாய்ச்
சலன வர்த்தமான சம்ஸ்காரமாய்
அம்ருதத்தின் கதிர்நாக் கொழுந்தின் யோனிக்கீற்று
அந்தரத்தில் அகண்டத்தின் வேர்பிடித்துக்
கண்டத்தின் அந்தத்துள் பாய்வது போல்
நின்று ஒளிர்வதென நிமிரவதன்
கொழுமுனையை நக்கி மனம்
தீத்திப்பெனக் களித்த தோய்வு
தொடரும் நிலையாய்ப் பரந்து
பிலிற்றும் சுகத் துவட்டாய்
ஒட்டவைத்த தீபமாய்
உருக்கரந்து ஒளியுமுனம்
உள்பரப்பின் புனல் பாய்வில்
உருத்தட்டும் முதல் சாட்டியமாய்
அகம் எழுந்து ஆடாமுன்
நான் நின்று நிலைக்குங்கால்
***
No comments:
Post a Comment