மாமா விரும்பியபடியே மாமி அமையவில்லை
அமைந்த மாமா மாமிக்குக்
குழந்தைகள் வாய்க்கவில்லை
குழந்தைகள் வாய்த்த மாமா மாமிக்கு
வாழக் கொடுத்து வைக்கவில்லை
குழந்தைகளோடு வாழும் மாமா மாமிக்கு
வசதி இல்லை
ஒன்றிருந்தால் ஒன்றில்லை
ஒன்றும் ஒன்றும் இருந்தால்
இரண்டும் இல்லை
ஒன்றோடொன்று இரண்டும் இருந்தால்
எதுவும் இல்லை
அனைத்துமிருந்து இரண்டும் இருந்தால்
நிலையில்லை
நிலைத்த ஒன்றில் இரண்டு இல்லை
ஒன்றைத் தாண்டி ஒன்றும் இல்லை
எல்லாம் ...
ஆதிகாலப் பாழில்
நெல் பரப்பிக்
கற்றுக்கொண்ட கணக்கு
இன்னும் விடியவில்லை
உலகில்
***
No comments:
Post a Comment