குழாய்த் தும்பிக்கை ஆட்டித்
தன்மேல் பாரமும் ஆளும்
பாண்டிலும் சுமந்து
பாகர் வேண்டுவ செய்துப்
பெரும்பொருள் இழுத்துக்
கனத்தைத் தூக்கிக்
கடிமரம் சுற்றிவளைத்து
எடுத்துப் போந்து
கால்வியாதிக்கு மருந்து கழிந்து
கவளம் நான் தூக்கிவரத்
தன் தும்பிக்கை இதழேந்தி
உள்வாய் பொருத்திப்
பிளிரெக்காளமும்
பெய்தூவல் தும்பிக்
கைச்சாரல் குளியலும்
அடைத்தது உடைப்பெனக்
கொட்டு சிறுநீரும்
அலங்கார ஊர்வல அணியில் முன்னிடமும்
ஆள்மேல் ஆள் அடுக்கிய உயரமும்
குன்றெனக் கொழுத்த தசை உருவமும்
இது ஆனை எனக்கு.
ஆனைக்கு?
தனைமறந்து
பிடிதொடரும்
படிவாழ்வுள்
பயிலும் சுகப்
புள்ளி
***
No comments:
Post a Comment