இறந்த சொல்லை உண்பவராய்
இருக்கின்றனர் ஆதி காலத்தில்
இறந்த சொல்
புதுப்புது உருவங்களில்
பரிணாமம் கொள்ள
மற்றவர் சொன்னதை
அவருக்கவர் சொன்னதை
அவருக்கு யாரோ சொன்னதை
வைத்து வைத்து ஊறப்போட்டு
உண்பவராய் இருக்கும் மனிதர்
சொந்தத்தில் சொல்லிச் சுடரெழுப்பிச்
சொல்லை மீட்டுயிர்க்கச் செய்யுங்கள்
உயிர்ச் சொல்
சொல்லிறந்த நிலைக்குச்
சுழலேணி ஆகச்
சொல்லில் உயிர்ப்பாய்ச்
சொல்லால் உயிர்த்துச்
சையோகம் கொள்ளுங்கள்
வையம் வாழ என்று.
***
No comments:
Post a Comment