கிழக்கில் கதிரோன் கண் விழித்தமர்ந்தான்
கொள்ளிடத்தூடே குனித்த பாலத்தின்
முதுகில் கைவைத்து மண் மீதெழுந்தான்
கொல்லைப் புனத்தில்
கொத்தும் கிளி கடியக்
கவண்கல் பூட்டிக் கதிர் வைத்தெறிந்தான்
கார்மேக வானம் கன்றிச் சிவந்தது
கனையிருள் ஓடிக்
கரை மீதேறிச்
சோலைப் புழையுள் சென்று ஒளிந்து
கிளைகளினூடே எட்டிப் பார்த்தது
மருவிப் புணர்ந்த வடுவாம் நிலவை
மங்கல வானில் மேளம் கேட்டது
மாயோன் மேயக் காடுறை உலகில்
மருதம் இறுத்த மாலுணர் துயிலில்
குன்றம் உயர்த்திய கொள்கைக் குடையில்
கூடும் உயிர்க்காய்க் கடலைக் கடந்து
கடலில் கிடந்து கடலுள் குடைந்து
கடற்கரை கிடந்து காக்கும் கரியோன்
கையென நெஞ்சில்
கவிதை சுரந்தது.
***
No comments:
Post a Comment