Tuesday, November 23, 2021

பேச்சு

பேசினேன் உலகம் 
கேட்கும் என்பதற்காக அன்று 
என் உள்ளத்தைத் திறந்து 
கொஞ்சம் அசைபோட 
பார்த்தால் ... உலகம் .. 
அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறது! 
என்ன ஆயிற்று? 
இது கேட்கும் என்பதற்காக 
நான் பேசத் தயாரில்லை 
என்னிடம் இனிமேல் 
இது கோபித்துப் பயனில்லை 
பேசுவேன் எப்பொழுதாவது 
அதுவரையில் பொறுமை காக்கட்டும் 
இல்லையேல் போகிற வாக்கில் 
போய்க்கொண்டிருக்கட்டும். 

***

No comments:

Post a Comment