முறைப்பு உரசல்
காலம் பொறுமையிழந்து
கைகால் அசைத்து
எதையாவது எட்டிப் பிடித்து
முன்னேறு என்று முன்னால் தள்ள
தன் சக்கரம் சுழட்டி வீடுகளைச் சுற்றி
வில்லைகளை அள்ளிக்
கோப்பை மூடக் கொள்ளை அவசரம்
காலத்தின் கவலை அதற்கு
நானோ
ஆத்ம கனத்துடன்
போட்ட இடத்தில் போட்டபடி இருக்கிறேன்
காலம் கரித்துக் கொட்டினால்
நான் என் செய்ய?
***
No comments:
Post a Comment