Tuesday, November 23, 2021

தலைகீழ் சுழற்சி

உலகம் தலைகீழாய்ச் சுழல்கிறது 
எரிமலைக் குழம்புகள் 
வெளியில் பொங்கிக்கொண்டு 
பசுமைகள் உள்ளே 
புகைந்து கருகிக்கொண்டு 
உலகம் தலைகீழாய்ச் சுழல்கிறது 
உள்ளே உருண்டு கொண்டும் 
வெளியே மருண்டு கொண்டும் 
உலகம் தலைகீழாய்ச் சுழல்கிறது 
தன் கால்களில் கத்தியைச் சொருகி 
அழிவினின்றும் தன்னைக் காக்கும் 
ஓஸோன் குப்பாயத்தில் ஓட்டை போட 
உலகம் அழியத் தொடங்கிவிட்டதோ 
திருந்தாதோ உலகம் 
ஈர நெஞ்சைப் பிழிந்தாலும் 
ஆன்மா சிதையேறுமோ 
நம்பிக்கையால் பொத்தி அணைத்தாலும் 
தீ அணையாதோ 
அழியத் தொடங்கிவிட்டதோ உலகம் 
தெளிந்து திருந்தாதோ ... 

***

No comments:

Post a Comment