Wednesday, November 3, 2021

பொறுத்தலின்மை

காத்திருந்தேன் 
ரயில் வரவில்லை 
சலிப்பும் சங்கடப் பார்வைகளும் 
தண்டவாளத்தைத் தேய்த்துத் 
துலக்கிய ஒளியில் 
பரிதியில் காய்ந்த வான் 
வந்து அமர்ந்தது 
ரயிலுக்குப் பொறுக்கவில்லை 
போ போ போ என்று வந்தது. 

***

No comments:

Post a Comment