Thursday, November 18, 2021

காலத் தொடர்ச்சி

காலப் பழமையும் 
கோலப் புதுமையும் 
முன்பின்னாக ஒரு நூலாய் 
முழுதும் படித்து முடித்த பின்னர் 
முதல் அத்யாயம் தொடங்கிடுமோ? 
முற்றும் என்று வந்திடுமோ? 
பற்றும் அகன்று 
பக்கம் கழன்று 
தனித்தனியாகப் பிரிந்திடுமேல் 
தேடித் திரட்டித் 
தொகுத்தொரு நூலாய்த் 
தொடுக்கும் தத்துவம் தொடர்ந்திடுமோ? 

***

No comments:

Post a Comment