நடந்தால் தீமிதி
நின்றால் எரிசட்டி
பார்வையின் நடுவில்
பளிங்குநீர் நெளிவு
குழாயடி நீர்க்குழியில்
நக்கும் நாய் வாலாட்ட மறந்து
பண்ணையாள் கிராமத்திற்குப்
பயணம் ஆகிறான்
பரிதியால் கரைக்க முடியாத இருளாய்
பாதியில் கோட்டை வாசல்
பதுங்கி விளையாடும்
பள்ளிச் சிறுவனின் வசந்த காலமாய்
நண்பகல் வேர்த்து வடிகிறது
கந்தகம் கெட்டித்துக்
குழாயில் ஆணி வைத்துக்
கருங்கல் பாறையில் மோதியெழும்
வெடிச்சத்தம் திட்டிச் சந்தில்
ஆங்கில படையெடுப்பின் கேலியாய்
அப்பா! ரங்கா! என்ன வெயில் ..
என்று அலுத்தபடியே
மூதாட்டி அதே நடையில்.
***
No comments:
Post a Comment