Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Friday, November 5, 2021
பகீரத தவம்
கங்கையைத் தொடுங்கால்
ஆதிகால பகீரத தவஜடை
சிவக் கொழுந்தின் நுனி தொடும்
சிலிர்ப்பில் புலர்ந்த
ஊழி விடியல்
உருட்டி வந்த காலக் கோலி
நிகழ் இடப் பளிங்கில் மோதிய
சிரிப்பில் சிந்தை குளித்துச்
சில்லெனக் காற்றில் சிட்டாய்
வெடவெடத்தெழும் விரைகதிர்ப் பரிதி.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment