தழல் குறைத்துப் பதத்தில் இறக்கிப்
பக்குவமாய் உலர்த்தி வைக்க
மாலை முதுவெயிலில்
தெருவைத் துடைத்துத் தடநிழல்கள்
மாடப்புழை மேட்டில்
மீவான் அகல் ஏற்ற விரையா முன்னம்
போவான் நட்புறவில் பேசிக் களியாடப்
பாதை படிந்து
பகற்கனவின் தூசியெழச் செல்வேனை
நங்கைப் பருவம் தாண்டி
நடுவயதுக் கட்டெழிலாள்
அங்கை பல இருந்தால் ஆகாதோ என
ஏங்க வைக்கும் கொங்கையினாள்
செவ்வந்திச் சேலைக்குள்
தீவாய் முலைமுகட்டின் தீவிரத்தில்
மாட்டிய என் கண்பாவை நிமிர்த்தி
வெண்வெளியில் பதிந்த
கரும்பரிதிக் கண் கொஞ்சப்
பண்மொழியாள் பயிற்றுமொரு பதைபதைப்பில்
உள்ரேழி தாண்டி ஓரத்து அறையில்
விறகடுக்கி வைத்த இடுக்கில் ஒரு கருந்தேள்
பிடிக்கவோ அடிக்கவோ கூப்பிட்டாள்
கருந்தேள் அடித்துக் காட்டுகின்ற வீராப்பில்
கண்ணாலத்தி எடுத்துக் கோட்டும்
அவள் கடைக்கணிப்பில்
நன்றியென நாரியவள்
முந்தானை விலக
முறுவலித்த முலைக்காம்பில்
முத்திட்ட மூர்க்கத்தில்
குறுவெயர்க்கக் கூடி ஒரு
கோடி இன்பத் தேள் கொட்டிக்
காலக்களிக் கொடுக்காய் உருமாறிக்
கட்டெழிலாள் மேனியெல்லாம் கொட்டிவரக்
குமுறிவரும் ஆர்வத்தால் கட்டை எடுத்துக்
கருந்தேள் அடித்தேன்
கழிக்குத் தப்பியது காணாமல் மறைந்து
கடுவிஷமாய்க் காரிகையின் அலுப்பாகிக்
கணக்கின்றிக் கொட்டியதால்
கட்டையென மீண்டேன்
கொங்கைகளின் கெக்கலிப்பில்
அங்கை பிசைந்து
அரைக்கண்ணில் முலைக்காம்பின்
முள்குத்தப் பொறுக்காமல்.
***
No comments:
Post a Comment