Monday, November 15, 2021

இரயிலின் ஆவி

ஊர் ஒரு வழியாய்த் தூங்குகிறது 
காற்றும் மண்ணும் விண்ணும் 
தீயும் நீரும் 
நிம்மதியாய்ப் பெருமூச்சு விடுகின்றன 
நாய் ஒன்று 
நடுவானுக்குத் தந்தி கொடுக்கிறது 
நிலவோடு மரத்திலைகள் சிணுங்குவதைக் 
கீரிப்பிள்ளை இரசித்துவிட்டுப் போகிறது 
எங்காவது ஓரமாகப் 
படுத்து அசைபோடத் 
தெருமாடு பொறுமையாக 
இடம் தேடிச் செல்கிறது 
என்றோ ஓடிய இரயின் ஆவி 
இன்றும் சரியாக 
நேரத்திற்குக் கூவிக்கொண்டு போகிறது. 

***

No comments:

Post a Comment