Wednesday, November 10, 2021

கடவுளின் பார்வை

கோயில் திறந்திருக்கிறது 
கோபுரம் உயர்ந்திருக்கிறது 
கொள்கை சூழ்ந்த 
கருவறைக் கொலுவில் 
கடவுள் வீற்றுக் காண்கிறது 
திறந்த வெளியை 
திரைக்கடலை 
மண்மேல் பிறந்து 
தன்போல் வளர்ந்து 
திசைமாறிப் போன மனிதரை 
தனக்குப் பிடித்த வடிவும் தன்மையும் 
தான் வணங்கும் தெய்வத்துக்காக்கி 
தெய்வத்திற்குகந்த வாழ்வை நூல்களில் ஆக்கி 
எய்தும் நிலையை மறந்து 
வைய வாழ்வில் தொய்வை ஆக்கித் 
திசைமாறிப் போன மனிதர் 
திரும்புவார் என்று காத்திருக்கிறது. 

***

No comments:

Post a Comment