Tuesday, November 23, 2021

அகநீர் ஓடை

நடந்தது நடக்காதது போல் 
தள்ளி இருக்கலாம் 
நடந்தது ... 
பாதித்துக் கொண்டுதான் 
நடக்க வேண்டுமா? 
நடப்பதற்கு இதயத்திலும் 
நடுங்க வேண்டுமா? 
ஏன் நடந்தது? 
ஏன் நடக்கவில்லை? 
ஏன் நடக்கிறது? 
கேள்வி கேட்கும் பகுதியில் 
எதுவும் நிகழவில்லையா? 
நிகழ்வதின் சாட்சியாய் 
நிலைத்திருப்பது 
நடவா கனவா? 
நடந்தால் பிளவா? 
பிளவூடு பாய்ந்து விழும் 
பதட்டக் கால்கள் 
பார்வைச் சில்லாக்குகளில் 
பட்டு எகிறி 
அனுபவத் தேம்பல்களாய் 
அகநீர் ஓடையில் .. 

***

No comments:

Post a Comment