பாருணர வடிவீந்தும்
பாரதியில் உணர்வு தந்தும்
ஊக்கமுடன் உவப்புடனே
ஷேக்ஸ்பியரில் சிறக்கவைத்தும்
உள்ளிருக்கும் திறமைகளை
உற்றறிந்தே வெளிக்கொணர்ந்தும்
முள்ளிருக்கும் வழியகற்றி
மூடியவாயில் தாழகற்றி
நள்ளிருளில் நேரொளியாய்
நயமாக வழிநடத்திச்
சுயமாகச் சிந்தனையில்
நான் வளர நீ மகிழ்ந்தாய்
ஊன் வளர உணவீந்தாய்
உணர்வு வளர நீ உவந்தாய்
தாய்க்கும் தாயாகித்
தந்தையிலும் தோழனாகி
எந்தையென என்நெஞ்சில்
என்றும் நிலை கொண்ட வேணு
இன்றும் உனை வியந்தே
வணங்கி நிற்பேன் வாழி.
***
No comments:
Post a Comment