மூலசுருதியில் லயமாகிப்
புத்தகப்பை தாங்கிப்
போகும் வாக்கில்
உயிரியல் கூடத்தில் எட்டிப் பார்த்தால்
எதிர் நகைத்து இருள் விழிக்கும்
ஓர் எலும்புக் கூடு
யாரவன்?
அவள்?
அவர்?
அது?
அஃது!
தசையுண்ட இயற்கை
தோற்றுவிட்ட தொடர்பு
தொடருயிரை முறித்த காலம்
தொட முயன்று விழித்த கோலம்
தொலைவில் புகை விட்டு
மூலை மரம் தொட்டு வரும்
பின்னிருள முன்னுருளிப்
பின் அருள முன் இருளி
முறைவருட மடிந்துதரும்
மூர்ச்சனையாய் முந்து ரயில்
கடந்து செலக்
கூடத்துள் எட்டிப் பார்த்தால்..
***
No comments:
Post a Comment