Tuesday, November 9, 2021

சொல்லில் மௌனம்

வனம் பரிதி புணர்ந்த 
மரங்கள் அடைகாக்கும் 
இருள் முட்டை 
ஆதிகால அந்தகாரத்தைக் 
கதிரும் மதியும் 
மாற்றி மாற்றி மாற்ற நினைக்கும் காலம் 
எழுத்து புதிய கண்டுபிடிப்பு 
சொல் 
ஒலி அச்சில் ஊற்றிச் 
செவி உணரும் ஏடு 
நூல் இல்லை 
அடையாள அட்டை, ஆண்டுச் சந்தா 
அடுக்கி வைத்த கைம்மொழிகள் 
படிக்கப் பார்க்கப் புரட்ட 
ஏதுமில்லை. என் செய்வது? 
எதை மேற்கோள் காட்டுவது? 
எப்படி ஒரு கருத்தை எடுத்துச் சொல்வது? 
சொல்.. சொல்.. சொல்.. 
சொன்னால்.. 
சொல்லிப் பார் 
சொல்லத் தொடங்கினால் 
இது என்ன? 
திடும் என மௌனம் 
விழித்துக் கொண்டேன் 
ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. 

***

No comments:

Post a Comment