என்னைச் சுற்றிச்
செல்வது மாறி
என்னிடமிருந்து.. விலகி
ஒதுங்கிச் செல்ல விரைகிறது
வீடு தன்னந் தனியாய்க் கிடக்கிறது
நானும் என்னில் பழகிச்
சூழ்ந்த உலகையும்
இன்னும் விலகியிருந்ததையும்
உட்கொளும் ஒரு முழுமையில்
கூட்டுக் குடும்பமாய் இருக்கிறேன்
வீடு யோசிக்காது
என்ன ஆகும்
எனது யோசனை கவலையின்றி
வீடோ விலகித் தனிமையில்.
***
No comments:
Post a Comment