Monday, November 15, 2021

வடிவற்ற ஓசை

கட்டடங்கள் நிலையாக நிற்பதில்லை 
குட்டிச்சுவர்கள் நெடுங்காலம் மறைவதில்லை 
வக்கணையாய்க் காப்பாற்றும் வயலும் 
வறண்டு விடுகிறது 
குட்டிச்சுவரில் முளைத்த செடி 
காலத்திற்கும் நிற்கிறது 
வெளிக்கரையில் வந்து விழும் கால அலை 
வழித்தெடுத்த வடிவுக்கு அப்பால் 
வானத்தில் விரைந்து 
வற்றும் 
விமானப் புள்ளி 
வடிவற்ற ஓசையாய். 

***

No comments:

Post a Comment