வருகின்ற ஆற்றின்
கரைதுயிலும் சோலைகளில்
தூங்காமல் ஒரு கிளி கத்தும்
தொல்பழங் காலத்துத்
தர்மவர்மன் ஆட்சியிலே
தழைத்திருந்த வில்வம் பழம் உருட்டித்
தொலையாத காலமெல்லாம்
சூழ்ந்து துயில் அறியும் புண்ணியத்தைக்
காவிரியின் கரையுழவர்
கண்டுமுதல் செய்கின்ற
நன்செய்ப் பயனதனைச்
சீயபுர மூதாட்டி
கூப்பிட்ட குரல்வாங்கி
விளக்குப் பிச்சனார்
வாய்கடித்த பழங்கொறித்து
வண்ணான் கைவண்ணம்
உலராடை மீதமர்ந்து
வண்ணமுற மிழற்றுமால்
வாய்மொழியின் பைங்கிளியே.
***
No comments:
Post a Comment