Sunday, November 7, 2021

வறுமை

வழிவழியாய் வந்த வாழ்வு வயல் 
விளைச்சல் மலைமலையாய் 
முற்றம் நிறைத்தது 
நில்லாது குவியும் நீள்போகம் 
தமதென்ற நினைவை விட்டார் 
பஞ்சம் பிழைக்க வந்த 
பரதேசி கையேந்த 
அவனுக்கே ஒற்றி வைத்து 
அவன் பார்த்துப் படியளக்கத் 
தம் வயலில் 
தம் முன்னோர் தமதுழைப்பில் 
தாம் கண்ட மகசூலில் 
தமது என்ற நினைவு விட்ட 
தரித்திரமே மிஞ்சத் 
தொய்வாகி நிற்கின்றார் தொல்லை 

***

No comments:

Post a Comment